பதுளை மாவட்ட செயலகம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

August 6, 2012 0
பதுளை மாவட்ட செயலகம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பதுளை மாவட்ட செயலகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக இன்று திங்கட்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

பதுளை மாவட்ட செயலகம் 333 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, ஊவா மாகாண ஆளுநர் சீ.நந்த மெதிவ்  உள்ளிட்ட பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் பதுளை மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் விசேட மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார்.