ஐ.தே.க உறுப்பினர் கிரிஷாந்த விளக்கமறியலில்!

August 6, 2012 0
ஐ.தே.க உறுப்பினர் கிரிஷாந்த விளக்கமறியலில்!

காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஸ்பகுமார, போப்பே பொத்தல பிரதேச சபை உறுப்பினர் அமில நுவன் ஆகியோரை எதிர்வரும் எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்கள் காலி மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று (05) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அக்மிமன – தல்கம்பொல பகுதியில் நடைபெற்ற திருமண வைபவமொன்றினால் வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசலை சீர்செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்த போது, அதற்கு சந்தேக நபர்கள் இடையூறு செய்ததாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.