வன்னி யுத்தத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட ஏவுகணைகளை பராமரிக்க முடியாத நிலை! அதே நாடுகளிடம் திருப்பிவிற்க அரசு முடிவு:

August 6, 2012 0
வன்னி யுத்தத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட ஏவுகணைகளை பராமரிக்க முடியாத நிலை! அதே நாடுகளிடம் திருப்பிவிற்க அரசு முடிவு:

வன்னியில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற போது, படையினருக்காக கொள்வனவு செய்யப்பட்ட ஏவுகணைகளை கொள்வனவு செய்த நாடுகளிடமே விற்பனை செய்வதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன ஆயுத விற்பனை நிறுவனங்களிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

போருக்காக இறக்குமதி செய்யப்பட்ட பல ஆயுதங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

அவற்றை பராமரிக்க பெருமளவில் பணத்தை செலவிட வேண்டியுள்ளது. இதனால் அவற்றை கொள்வனவு செய்த நாடுகளிடம் மீள விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏவுகணைகளை பாதுகாப்பதற்காக அவற்றை குளிரூட்டிய அறைகளில் வைக்க வேண்டியுள்ளதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.