உலகத்திலேயே தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற ஒரே ஒரு எதிர்க்கட்சி இந்நாட்டு எதிர்க் கட்சி என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது ஜேவிபி எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற (05) ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலை பகுதி பகுதியாக நடாத்துவதில் எதிர்க் கட்சிக்கு சாதகமான நிலை இருந்த போதிலும் இந்நாட்டு எதிர்க் கட்சி அதற்கு அஞ்சுகிறது.
இத்தகைய எதிர்க் கட்சியே 18ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








