கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளாம்: இனவாதியின் கண்டுபிடிப்பு

August 1, 2012 0
கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளாம்: இனவாதியின் கண்டுபிடிப்பு

தமிழ் ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என இனவாதி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாம் சிங்கள பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இந்த கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இன்றைய சூழலில் போதைவஸ்து வியாபாரம் செய்பவர்கள் தாராளமாகப் பத்திரிகைகளைப் புதிதாக ஆரம்பித்து நடத்தி வருகின்றார்கள்.

இதே போலவே அன்றைய சூழலிலும் தழிழீழ விடுதலைப் புலிகளும் தமது உறுப்பினர்களை தமிழ் ஊடகங்களில் பணியாற்ற அனுப்பினார்கள்.

அவ்வாறான தழிழ் ஊடகவியலாளர்களே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.