வவுனியாவில் பெண் தொழிலதிபர் ஹொட்டல் ஒன்றில் சடலமாக மீட்பு

July 25, 2012 0
வவுனியாவில் பெண் தொழிலதிபர் ஹொட்டல் ஒன்றில் சடலமாக மீட்பு

வவுனியாவில் ஹோட்டலொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

தொழிலதிபரான கேதாரலிங்கம் விசாகினி (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.