இலங்கை பெலவத்த, வலளாவிட்ட என்ற இடத்தில் மிருகம் என நினைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றை மலைப்பாம்பு சுற்றி வளைத்ததில் இளைஞர் ஒருவர் மயிரிழையில் அதன் பிடியில் இருந்து தப்பியுள்ளார்.
மேற்படி இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்ற போது மலைப்பாம்பு மோட்டார் சைக்கிள் மீது ஏறியுள்ளது. இதனை அறியாது மோட்டார் சைக்கிளை இயக்க முற்பட்ட வேளை சிரமத்தை எதிர் நோக்கிய போதே மலைப் பாம்பு மோட்டார் சைக்கிளை வளைத்துப் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர் மண்;ணெண்ணெய் மற்றும் பெற்ரோல் போன்றவற்றை ஊற்றி பாம்பை மோட்டார் சைக்கிளை விட்டு பிரித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும் உயிருள்ள மிருகம் என கருதியே இவ்வாறு மலைப் பாம்பு மோட்டார் சைக்கிளை சுற்றி வளைத்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
















