அண்மையில் யாழ் சுழிபுரத்தில் இடம்பெற்ற மேடை நிகழ்ச்சி ஒன்றில் ஒலித்த என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்ற புரட்சி பாடல் சிறிலங்காவை பெரிதும் அச்றுத்தியுள்ளது.
ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வில் சுகுமார் குழுவினரின் இன்னிசை நிகழ்வு நடைபெற்றது. இதில் புரட்சி பாடகர் சுகுமார் “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்ற பாடசாலை பாடிக் கொண்டிருந்தார்
இந்நிலையில் திடீரென புகுந்த சிறிலங்கா காவல்துறையினர் பாடகர் சுகுமாரிடமிருந்து ஒலிவாங்கியைப் பறித்தெடுத்து பாடுவதை தடுத்தனர். அத்துடன் பாடல் திரட்டுக்கள் அடங்கிய கொப்பியையும் பறித்தெடுத்தனர்.
இந்தப் பாடல் விடுதலைப் புலிகளின் கருத்துக்களைக் கொண்டிருப்பதால் இளைஞர்களை தூண்டுகிறது. இது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே இந்தப் பாடலைப் பாட முடியாது என்று கூறி சுகுமாரிடன் முரண்பட்டனர்.
இதேவேளை புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடுவதற்கு ஏன் சிறிலங்கா காவல்துறையினர் தடை விதிக்கின்றனர் என்று கூறி கொதித் தெழுந்தனர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள்.
அச்சுறுத்தலுக்கு பின்னர் அரங்கை விட்டு வெளியேறிய காவல்துறையினர், இசை நிகழ்வை ஒழுங்கு செய்த ஆலய அறங்காவலர் சபையிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர்களில் சிலரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டும் சென்றனர்.
இதேவேளை மேற்படி பாடகர் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடகராக இருந்து பல எழுச்சிப்பாடல்களைப் பாடியிருந்தார்.
சாந்தன் உட்பட ஏனைய எழுச்சிப் பாடகர்களுடன் இணைந்து பல மேடைகளில் எழுச்சிப்பாடல்களைப் பாடி மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தியவர்.
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தைத் தொடர்ந்துவவுனியா நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்த சாந்தன், சுகுமார் உள்ளிட்ட பாடகர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












