மாமாங்கேஸ்வரர் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தில் இலட்சக்கணக்கான மக்கள் – (படங்கள் இணைப்பு)

July 19, 2012 0
மாமாங்கேஸ்வரர் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தில் இலட்சக்கணக்கான மக்கள் – (படங்கள் இணைப்பு)

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கிழக்கிலங்கையிலிருந்து மட்டுமன்றி நாட்டின் பலபாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த இலட்சக்கணக்கான மக்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்டனர்.

இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செலுத்தும் ஆடிஅமாவாசை தினமான இன்று மாமாங்கேஸ்வரர் தீர்த்த கேணியில் மக்கள் பிதிர்கடன்களை செலுத்தினர். காலை வசந்த மண்டப பூசைகளை அடுத்து சுவாமி வெளிவீதி வந்து நண்பகல் 12மணிக்கு தீர்த்தமாடினார்.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகளும் இடம்பெற்றன. வழமை போல இம்முறையும் தென்னிலங்கை வியாபாரிகள் உட்பட பெருந்தொகையான வியாபாரிகள் தங்கள் வர்த்த விற்பனை நிலையங்களையும் அமைத்திருந்தனர்.