ஆடி அமாவசையையொட்டி பிதிர்க்கடன் கழிப்பதற்காக இன்று புதன் கிழமை பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கீரிமலை கண்டாங்கி தீர்த்தக் கரையில் ஒன்றுகூடினர். அதிகாலை முதல் தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள், மினி பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் எனப் பல வாகனங்களிலும் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்து தமது பெற்றோர்களின் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதில் ஈடுபட்டார்கள்.
தீத்தக்கரையில் பல அந்தணர்கள் இருந்து பிதிர்க்கடன் செலுத்துபவர்களின் கடன்களை நிறைவேற்றி வைப்பதில் ஈடுபட்டார்கள. முதியவர்கள் முதல் சிறுவர்கள், பெண்கள் எனப் பலரும் பிதிர்க்கடன்களைச் செலுத்தினார்கள்.



















