யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கால்நடைத்திணைக்களத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட காளை மாட்டை கொள்வனவு செய்த வியாபாரி அதனை இறைச்சிக்காக வெட்ட விளம்பரம் செய்த நிலையில் நீதிமன்றத்தை நாடி காளை மாடு வியாபாரியிடம் இருந்து மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.
குறிப்பி;ட்ட காளை மாடு கிரிமலை நகுலேஸ்வரத்தில் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் ஆடி அமாவாசைக்கு வந்த பொது மக்கள் பலரும் முண்டியடித்து இந்தமாட்டைப் பார்வையிடுவதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.












