மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறந்த பாடம் கற்பிற்பார்கள் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது என குறிப்பிட்டதுடன்,
சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா ஆகிய மூவரும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் உடையும். அவர்கள் ஐக்கியமாக இல்லை. நாங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று இனங்களையும் ஒன்றிணைத்து தேர்தலில் களமிறங்குவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 25 முதல் 27 ஆசனங்களை கைப்பற்றும் எனமுன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.








