மகிந்த அப்படி என்னத்தை குனிஞ்சு பாக்கிறார் ?

July 15, 2012 0
மகிந்த அப்படி என்னத்தை குனிஞ்சு பாக்கிறார் ?

மகிந்தர், தான் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தொடர்பாக மிகுந்த கவனம் செலுத்தும் ஒரு நபர். பிறநாட்டுத் தலைவர்கள் போல, அதிகம் சிப்பதை தவிர்க்கும் மகிந்தர் கேலிக்கு இடமாகும் வகையில் போஸ் கொடுப்பதே இல்லை. முன்னர் மகிந்த லண்டன் வந்தவேளை அவரது உரை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் லண்டனை விட்டு வெளியேறியவேளை, விடுதியின் வாசலில்வைத்து தலையில் விழுந்த பனித்துளியை துடைத்தார். ஆனால் அவ்வேளை ஒரு புகைப்படப் பிடிப்பாளர் அதனை புகைப்படம் எடுக்க, மகிந்தர் ஏதோ தலையில் கையை வைத்து, விசனத்துடன் வெளியேறுவதுபோல அக்காட்சி அமைந்து பெரும் பரபரப்பை தோற்றுவித்தது.

அதேபோல மிக அரிதான புகைப்படங்களில் இதுவும் ஒன்று. மகிந்தர் அப்படி எத்னைக் குனிந்து பார்கிறார் என்று நினைக்கிறீர்களா ? 2012 மே மாதம் நடைபெற்ற (புலிகளை வெற்றிகொண்ட) வெற்றிவிழவில் தான் இப் புகைப்படம் எடுக்கப்பட்டது. இவர் குனிந்து பார்பது ஏரோபிளேனை அல்ல ! பரா- சூட்டில் குதித்த விமானப்படை அதிகாரி ஒருவரைத்தான். அவர் விமானத்தில் இருந்து குதித்தால் எங்குவந்து இறங்குவார், என்று மகிந்தர் அங்கலாய்க்கிறார்….போல ….

இதைப் பார்க்க ஒரு பழைய கதை தான் நினைவுக்கு வருது !

ஒரு தமிழ் வாத்தியார், எழுவாய், பயநிலை, செயற்படுபொருள் பற்றி படிப்பித்துக்கொண்டு இருந்திருக்கிறார். அதேவேளை வகுப்பறையில் இருந்த பெடியன் ஒருவன், முகட்டைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான். அங்கே எலி ஒன்று ஓட்டுக்கும் சீலிங்க்கும் இடையே நுளைந்துகொண்டு இருந்தது. அந்தப் பெடியனை அவதானித்த வாத்தியார், திடீரென ஏறுதா ? அதாவது மண்டைக்குள் ஏறுதா என்று கேட்டுள்ளார். திடுக்கிட்ட பெடியன் , ஏறீவிட்டது வால் மட்டும் தான் மிச்சம் என்று சொல்லி இருக்கான்(அவன் சொன்னது எலியைப் பற்றி) அதற்கு வாத்தியார் சொல்லியிருக்கிறார்,

தம்பி நீ எழுவாய் !

இங்கிருப்பதில் பயனில்லை !

வெளியே செல்வதே செயற்படுபொருள் ! என்று